ஒரு ஓவியத்துக்கு இத்தனை கோடியா…. அப்படி என்ன ஓவியம் அது?

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஓவியங்களின் ஏலம் ஒன்று நடைபெற்றது. அதில் பல ஓவியங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டன.
அதில் உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோ வரைந்துள்ள ஜன்னலில் அமர்ந்திருக்கும் பெண்ணின் ஓவியம் ஏலம் ஆரம்பித்த 19 நிமிடங்களிலேயே ரூபாய் 758 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகழ்பெற்ற ஏலத்தினை அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஏல மையம் நடத்தியுள்ளது. இதில் பலரும் பங்கேற்று ஆர்வத்துடன் ஏலம் கேட்டனர்.
பிக்காசோ 1881 இல் பிறந்து 1973-இல் உயிரிழந்தார். 1932 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்ட இந்த ஓவியம், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் ஏலத்தில் 28.6 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கப்பட்டது. இது தற்போதைய விலையை விட பாதிக்கும் குறைவானதாகும்.
கொரோனா நெருக்கடி சூழலிலும் இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் பெறப்பட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.