ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

உலகளவில் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. ரிங் ஆஃப் ஃபயர் என அழைக்கப்படும் பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளது. இதனால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது உண்டு.
ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரையில் வெள்ளிக்கிழமை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து, சுனாமி எச்சரிக்கை எதுவும் விதிக்கப்படவில்லை..
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.