கொரோனா பாதிப்பில் இந்தியாவிற்காக துணை நிற்போம் – பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவில், கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள பாதிப்பு உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டு வர துணை நிற்போம் என சீனாவும், பிரிட்டனும் உதவிக்கரம் நீட்டியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தனது ஆதரவை இந்தியாவிற்கு தெரிவித்துள்ளார். இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா அலையின் அபாயகரமான பாதிப்புக்கு எதிரான போரில் இந்திய மக்களுடன் துணையாக இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் இதர உலக நாடுகளை சேர்ந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். உலக அளவிலான இந்த சவாலை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தற்போது தான் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *