ஓராண்டுக்குப் பிறகு ஜார்ஜ் பிளாய்டுக்கு கிடைத்த நீதி!

அமெரிக்காவில், ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பினத்தவரை கடந்த ஆண்டு மே 25 ஆம் தேதி சந்தேதகத்தின் பேரில் காவல் துறையினர் கைது செய்தனர்.  டெரிக் சவுன் என்ற அந்த போலீஸ் பிளாய்டை தரையில் தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிளாய்ட் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனால், அவரின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வந்தனர். ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் டெரிக் சவுன் உள்ளிட்ட 4 போலீஸார் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதனையடுத்து, நான்கு போலீஸார் மீதும் வழக்குப்பதிவு செய்து பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தற்போது, தீர்ப்பு வந்துள்ளது. டெரிக் சவுன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 40 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *