அர்ஜென்டினா அதிபருக்கு கொரோனா உறுதி!
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் அதிபருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளார்.
அந்த வரிசையில், அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பதிவில் “காய்ச்சல் மற்றும் லேசான தலைவலி ஏற்பட்ட பின்னர் கரோனா பரிசோதனையை மேற்கொண்டதில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.