சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த ‘எவர் கிவ்வன்’ கப்பல் மீட்பு!
உலகின் முக்கியமான வணிக நீர்த்தடங்களில் ஒன்று சூயஸ் கால்வாய். கடந்த 23ம் தேதி தைவான் நாட்டைச் சேர்ந்த எவர்கிவ்வன் சரக்கு கப்பல் சீனாவிலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு நெதர்லாந்து நாட்டிற்கு புறப்பட்ட இந்த சரக்குக்கப்பல் சூயஸ் கால்வாயில் பயணிக்கும்போது அடித்த பலமான காற்றில் கட்டுபாட்டை இழந்து கால்வாயின் குறுக்காக தரை தட்டி நின்றது.
ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இப்பாதை தற்போது அடைபட்டிருப்பதால் கப்பல் வாயிலான சர்வதேச சரக்கு போக்குவரத்து பெரிதும் ஸ்தம்பித்துள்ளது. கடந்த 6 ஆறு நாட்களாக ஒரே இடத்தில் நிற்கும் இந்த பிரமாண்ட கப்பலால் ஒரு மணி நேரத்துக்கு ரூ 3000 கோடி இழப்பீடு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் முயற்சிகளின் காரணமாக சரக்குக் கப்பல் மிதக்கத் தொடங்கியிருந்தாலும், அந்தப் பாதையில் எப்போது கப்பல் போக்குவரத்துத் தொடங்கும் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. மேலும், அப்பாதையில் பல நாள்களாக நின்றிருக்கும் 450க்கும் மேற்பட்ட கப்பல்களுக்கான பாதைகளை சீரமைக்க எத்தனை நாள்கள் ஆகும் என்பதும் தெரியவரவில்லை.
சரக்குக் கப்பல் சிக்கியிருந்த பகுதியில் 27 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு 18 மீட்டர் ஆழத்துக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இன்று இந்தக் கப்பல் மீட்கப்பட்டுள்ளது.