ஸ்தம்பித்துப்போன சூயஸ் கால்வாய்!

சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் செயற்கை போக்குவரத்து வழியாகும்.மேலும்,உலகின் சரக்கு கப்பல்கள் பலவும் செல்லும் முக்கிய பாதையாக விளங்கும் இந்த கால்வாய்க்கு தற்போது எந்தவொரு கப்பலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணம் எம்.வி எவர் கிவன் என்னும் பெரிய கப்பல் ஒன்று மணல்புயலின் காரணத்தால் தரைதட்டியுள்ளது.இதனால் அந்த வழியாக எந்தவொரு கப்பலும் தற்போது செல்ல முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கப்பலை மீட்கும் பணியில் பல சிறிய கப்பல்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.இருப்பினும் கப்பலை ஆழமான பகுதிக்கு இழுத்து வருவதற்கு ஒரு சில வாரங்கள் ஆகலாம் என சூயஸ் கால்வாய் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பல நாடுகளில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது இந்த சூயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால் மேலும் விலை உயர்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *