தடுப்பூசி செலுத்திக் கொண்டால் டோனட் இலவசம்

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை செலுத்திக் கொள்வதில் மக்களுக்கு தயக்கம் இருக்கிறது.

எனவே, தடுப்பூசி குறித்த தயக்கத்தைப் போக்குவதற்காக, அமெரிக்காவில் உள்ள ‘க்ரிஸ்பி க்ரீம்’ என்ற கடை விநோத அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து, அந்த கடை வெளியிட்ட செய்தி குறிப்பில், ”தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தடுப்பூசிஅட்டையைக் காண்பித்து, தனிநபராக எங்கள் கடைக்கு வந்து தினந்தோறும் இலவச டோனட்டைப் பெற்றுச் செல்லலாம். ஆண்டு முழுவதும் இந்தச் சலுகையை வழங்க முடிவெடுத்துள்ளோம்.

அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மக்களின் தனிப்பட்ட முடிவு. அதில் நாங்கள் தலையிடவில்லை. எனினும் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நாடு பாதுகாக்கப்படும் என்ற எண்ணத்தில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கும் மார்ச் 29 முதல் மே 24 வரை திங்கட்கிழமைகளில் இலவச டோனட்டும் காஃபியும் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *