தன் நாட்டு ஆண்கள் திருமணத்துக்கு விநோத தடை விதித்த சவுதி அரேபிய அரசு

சவுதி அரேபிய அரசு தன் நாட்டு ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. சவுதிஅரேபியாவில் மியான்மர், சாத், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் அதிகளவில் உள்ளனர்.

இந்த 4 நாடுகளைச் சேர்ந்த 5 லட்சம் பெண்களை, சவுதி அரேபிய ஆண்கள் திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி திருமணம் செய்ய வேண்டுமென்றால் கடும் கட்டுபாடுகளை கடைபிடிக்க வேண்டி வரும் என்று  மெக்கா நகர காவல் துறை இயக்குநர் மேஜர் ஜெனரல் அசாப் அல்-குரே தெரிவித்துள்ளார்.

இவர்களை திருமணம் செய்ய விரும்பும் ஆண்கள் 25 வயதுக்கு உட்பட்டவர் என மேயரால் வழங்கப்பட்ட சான்றிதழை சமர்பிக்க வேண்டும். விவாகரத்து பெற்ற ஆண்கள் அடுத்த 6 மாதங்களுக்கு அடுத்த திருமணம் செய்து கொள்ள முடியாது. மேலும், திருமணத்திற்காக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *