மியான்மரில் தொடரும் ராணுவத்தின் அராஜகம்! சீனா ஆதரவா?

மியான்மரில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சியை ராணுவம் கைப்பற்றி உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஊழல் நடந்து இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்து வருகின்றனர்.

போராடும் மக்களை ஒடுக்க ராணுவம் துப்பாக்கிச்சூடை கையில் எடுத்துள்ளது. இந்நிலையில், மியான்மர் ராணுவத்துக்கு சீனா ஆதரவளிப்பாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, யாங்கூனில் உள்ள ஹலிங் தார் யார் மற்றும் ஸ்வேபிதா சீனாவுக்கு சொந்தமான 10 கட்டமைப்புகளை போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சீன தொழிற்சாலைகள் சூறையாடப்பட்டு அழிக்கப்படுள்ளன. இதனால், பல சீன ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த வன்முறைகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மியான்மர் அரசை சீன தூதரகம் வலியுறுத்தியது. மேலும், மியான்மரில் உள்ள சீன நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று மியான்மர் ராணுவத்தை சீன வலியுறுத்தியது. சீன அரசின் இந்த கோரிக்கையை தொடர்ந்து யாங்கூனின் ஹலிங் தார் யார் மற்றும் ஸ்வேபிதா நகரங்களில் ராணுவ சட்டம் அமல்படுவதாக ராணுவம் அறிவித்துள்ளது.‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *