போராடுபவர்களைச் சுட உத்தரவிட்டார்கள்,நான் மறுத்துவிட்டேன் – மியான்மர் ராணுவ வீரர்
மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ராணுவத்தால் சிறைவைக்கப்பட்டு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.இதனை எதிர்த்து மியான்மர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போராட்டத்தில் ஈடுபடுவர்களை ராணுவம் இரக்கமில்லாமல் துன்புறுத்தி வருகிறது.இந்நிலையில் ராணுவத்தலைமை ராணுவ வீரர்களுக்கு மக்களை சுட உத்தரவு பிறப்பித்துள்ளது.இதை என்னால் செய்ய முடியாது என் நாட்டு மக்களை என்னால் சுட முடியாது என்று கூறிவிட்டு அந்த ராணுவ வீரர் மியான்மரிலிருந்து தப்பி தற்போது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் தஞ்சமடைந்துள்ளார்.இது குறித்து பிபிசி செய்திக்கு அந்த ராணுவ வீரர் பேட்டியளித்துள்ளார்.