செய்தி வாசிப்பாளராக திருநங்கை… நம்பிக்கை கொடுக்கும் தாஷ்னுவா!

வங்கதேசத்தில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் செய்தி வாசிப்பாளராக பணியில் சேர்ந்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் திருநங்கைகள் எல்லாத் துறைகளிலும் சாதனை படைக்க தொடங்கிவிட்டனர். அரசியல், காவல்துறை, மீடியா, நிர்வாகம் என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து வருகின்றனர்.

அந்த வகையில் வங்க தேசத்தில் முதன்முதலாக திருநங்கை ஒருவர் செய்தி வாசிப்பாளராகி இருக்கிறார். 29 வயதான திருநங்கை தாஷ்னுவா அனன் ஷிஷிர், மகளிர் தினத்தன்று செய்தி தொகுப்பாளராக வங்கதேச செய்தி ஊடகத்தில் செய்தி வாசித்து அசத்தியுள்ளார்.

வங்காள மொழி செய்தி தொலைக்காட்சியான போய்சாக்கி செய்தி சேனனில் தாஷ்னுவா நேரலையில் செய்தியை வாசித்துள்ளார் . அண்மையில் நடைபெற்ற ஆடிஷன் மூலம் தேர்வான அவர் பலகட்ட பயிற்சிக்கு பின்னர் இதனை சிறப்பாக செய்துள்ளார். இதன் மூலம் ஒரு மாற்றம் நடக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் . செய்தியை வாசித்து முடித்ததும் ஆனந்தக்கண்ணீர் அழுதுவிட்டார் செய்தி வாசிப்பாளர் அனன் ஷிஷிர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *