மியான்மரில் பத்திரிகையாளர்கள் கைதுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

மியான்மர் போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டதால் பத்திரிகையாளர்களை மியான்மர் அரசு கைது செய்துள்ளது. இந்தப் பத்திரிகையாளர்களை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் தரப்பில், “அனைவரையும் எங்கள் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள கேட்டுக் கொள்கிறோம். இதழியல் என்பது குற்றச் செயல் அல்ல. மியான்மரில் ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தைப் பதிவு செய்ததால் கைது செய்யப்பட்ட தெய்ன் ஸா உள்ளிட்ட 5 பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தெய்ன் ஸா உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் மீது பொது சட்ட விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு, 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *