பாகிஸ்தானில் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திங்கள்கிழமை 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முன்னதாக மஸ்துங் மாவட்டத்தில் பயங்கரவாத தடுப்புத் துறை இந்த நடவடிக்கையைத் தொடங்கியதாகவும், ஸ்ப்ளின்ஜி பகுதியில்
உளவுத்துறை தகவலின் அடிப்படையில் அப்பகுதியைச் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மாகாண தலைநகர் குவெட்டாவில் தாக்குதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து கனரக வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள், தானியங்கி ஆயுதங்கள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் சாதனங்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…