டோக்கியோவில் அவசரநிலை நீட்டிப்பு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அவசர நிலை மார்ச் 21 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் சுகாதாரத் துறை தரப்பில் கூறும்போது, “ ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட நான்கு பகுதிகளில் கரோனா பாதிப்பு காரணமாக அங்கு அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டுள்ளது. உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவை 8 மணிக்குள்ளாக மூடப்பட வேண்டும். கரோனா பாதிப்பு குறையாத காரணாத காரணத்தால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா பொதுமுடக்கத்தால் பல நாடுகள் பொருளாதார பாதிப்பைத் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 10 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
சினோபார்ம், ஜான்சன் & ஜான்சன், ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.