அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த எழுத்தாளர் உயிரிழப்பு!
வங்கதேசத்தில், புகழ்பெற்ற எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான முஷ்டாக் அகமது மரணமடைந்துள்ளார். கொரோனா காலத்தில் அரசு முறையாக செயல்படவில்லை என விமர்சித்து முஷ்டாக் அகமது கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால், மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் காவல் துறை காவலில் இருந்த போதே இறந்துள்ளார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மாணவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.