கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் மீட்பு!

நைஜீரியாவில் சம்ஃபாரா மாகாணத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகளைத் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். இச்சம்பவம் அந்நாட்டில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐக்கிய நாடுகள் சபை இச்சம்பவத்துக்குத் தனது கண்டனத்தையும், வருத்தத்தையும் பதிவு செய்தது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் 279 மாணவிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக நைஜீரிய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவிகள் அனைவரும், அரசு நல விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் மாணவிகளைக் கடத்தியது எந்தத் தீவிரவாதக் குழு என்ற விவரமும், பேச்சுவார்த்தையில் தீவிரவாதிகள் எம்மாதிரியான கோரிக்கைகள் வைத்தனர் என்பதும் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும், எந்தத் தீவிரவாத அமைப்பும் இந்தக் கடத்தல் சம்பவத்துக்குப் பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக, 300க்கும் அதிகமான மாணவிகள் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது, 279 மாணவிகள் கடத்தப்பட்டதாக நைஜீரிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…