பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும் – இந்தியா எச்சரிக்கை

ஐ.நா-வின் 46-வது மனித உரிமைகள் கழகத்தின் கூட்டத்தில் இந்தியாவானது பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ளது.

தனது நாடானது தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் வேளையிலும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்தவில்லை.மேலும் பாகிஸ்தான் அந்நாட்டின் சிறுபான்மையினரையும்,பிற வகுப்பினரையும் வஞ்சித்து வருவதாக இந்தியா சாடியது.இந்த ஐ.நா-வின் மனித உரிமைகள் கழக உறுப்பினர்களுக்கும் பாகிஸ்தானின் செயல்பாடு நன்றாக தெரியும். ஐ.நா-வால் முக்கிய தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கும் பாகிஸ்தான் தொடர்ந்து நிதியளித்து வருகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.இந்திய சுதந்திரத்திற்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் எண்ணிக்கையானது குறைந்துகொண்டே வருகிறது அதற்கு காரணமும் அந்நாட்டின் சகிப்புத்தன்மையற்ற மனப்பான்மையே ஆகும்.மேலும் சிறுபான்மையினரின் புனித தலங்களும் சூறையாடப்படுகின்றன.பாகிஸ்தான் தீவிரவாத்தை ஒழிக்க முயற்சி எடுக்கும் பட்சத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பல பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இயலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பாஜகவை புறக்கணிக்கும் அதிமுக… சின்னம், வேட்புமனு என எதிலும் சேர்க்காத எடப்பாடி  

அதிமுக.விற்கு ஆதரவளிப்பதாக பாஜக அறிவித்த போதிலும், பாஜகவை புறக்கணிக்கும் எடப்பாடி அணி. பணிமனையில்…

இடைத்தேர்தல்லாம் சரிவராது… ‘தமிழைத் தேடி’ பயணமே போதும் பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி

தமிழகத்தில்இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது பாமக கௌரவத் தலைவர் ஜி…