சர்கோஸி குற்றாவாளி – பிரான்ஸ் நீதி மன்றம் உறுதி

பிரான்ஸ் நாட்டின் அதிபராக, 2007 முதல் 2012 வரை பதவி வகித்தவர் நிக்கோலஸ் சர்கோஸி. 2007-ல் நடந்த அதிபர் தேர்தலின்போது, இவருக்கு லிபியா நாட்டிலிருந்து முறைகேடாக நிதி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லிபியா வின் முன்னாள் அதிபர் மம்மர் கடாபி உள்ளிட்டோர் இந்த நிதியை சர்கோஸிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் கோரமானவை என்றும் சர்கோஸி கூறியுள்ளார்.

இதுதொடர்பான விசாரணை 2013-ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. ஆனால் விசாரணை ஆணையம் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தியது. ஆனால் கடாபி மூலம், சர்கோஸிக்கு 5 கோடி யூரோக்கள் வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 2011-ல் கடாபியின் மகன் அளித்த பேட்டி மூலம் சர்கோஸி பணம் பெற்றது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

ஊழல் வழக்கில் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள், “ஊழல்  வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதால் அவர் குற்றவாளி என்று பாரீஸ் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதில், சர்கோஸிக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையில் இரண்டு ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டு அவருக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓராண்டு சிறைத் தண்டனையை சர்கோஸி நிபந்தனைளுடனே அனுபவிக்க உள்ளார். இந்த நிபந்தனைகளில் வீட்டுக் காவல் உள்ளிட்டவையும் அடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனையை எதிர்த்து சர்கோஸி மேல்முறையீடு செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பாஜகவை புறக்கணிக்கும் அதிமுக… சின்னம், வேட்புமனு என எதிலும் சேர்க்காத எடப்பாடி  

அதிமுக.விற்கு ஆதரவளிப்பதாக பாஜக அறிவித்த போதிலும், பாஜகவை புறக்கணிக்கும் எடப்பாடி அணி. பணிமனையில்…

இடைத்தேர்தல்லாம் சரிவராது… ‘தமிழைத் தேடி’ பயணமே போதும் பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி

தமிழகத்தில்இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது பாமக கௌரவத் தலைவர் ஜி…