ஐபோன்களை விட ஆண்ட்ராய்டு போன்களே சிறந்தது – பில்கேட்ஸ்

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில்கேட்ஸ் பல ஆண்டுகளாக உலக பணக்காரர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். பின்னர், சமூக சேவை, அன்பளிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்காக அதிக நிதிகளை ஒதுக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானாக திகழும் அவர், அண்மையில் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் தன்னைப் பற்றிய பகிர்ந்து கொண்ட ஒரு தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகின் மிகப்பெரும் தலைவர்களாக இருப்பவர்கள் அனைவரும் ஐபோன்களை, தங்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். உலகளவில் சுமார் 1 பில்லியன் பேர் ஐபோன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், டெக் ஜாம்பவானான பில்கேட்ஸ், ஆன்டிராய்டு போன்களை மட்டுமே தன்னுடைய அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாக கூறியுள்ளார். கிளப்ஹவுஸ் எனும் செயலியின் நேர்காணலில் பங்கேற்ற அவரிடம் செல்போன்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பில்கேட்ஸ், ”நான் நாள்தோறும் ஆன்டிராய்டு போன்களை மட்டுமே அதிகளவு பயன்படுத்துகிறேன். எல்லாவற்றையும் கண்காணிக்க வேண்டியிருப்பதால், அதற்கு ஐபோன்களை விட ஆன்டிராய்டு போன்களே சிறந்ததாக இருக்கிறது. ஐபோன் ஒன்றும் என்னிடம் இருக்கிறது. அதனை அடிக்கடி பயன்படுத்துவதில்லை. ஆன்டிராய்டு போன்கள் இயக்குவதற்கு எளிதாக இருக்கிறது. அவர், மைக்ரோசாப்ட் மென்பொருள்களை எளிதாக ஆப்ரேட் செய்யகூடியவகையில் இருக்கிறது. ஐபோன்களை பயன்படுத்துவதில் எனக்கு சிக்கல் இருப்பதை ஒப்புக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பில்கேட்ஸ் பேட்டியளித்த கிளப்ஹவுஸ் செயலி, ஆப்பிள் ஐபோன்களில் மட்டுமே உள்ளது. ஏராளாமானோர் ஐபோன் பயன்படுத்துவது பாதுகாப்பானது என கருதி அதிக விலைக்கு ஐபோன்கள் வாங்கி பயன்படுத்தும் நிலையில், பில்கேட்ஸ் அளித்த பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…