ப்ளாக் லிஸ்ட்டுக்கு வாய்ப்பில்லை:இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் ப்ளாக் லிஸ்ட்டில் வைக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் பாகிஸ்தான் தீவீரவாதத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.
பாரீஸை மையமாக கொண்டு இயங்கிவரும் FATF-ன் கூட்டமானது தற்போது முடிவடைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் வருகின்ற ஜூன் மாதம் வரை க்ரே லிஸ்ட்டில் இருக்குமென முடிவு எடுக்கப்பட்டுள்ளது.கூட்டத்திற்கு பின் நிரூபர்களை சந்தித்து பேசிய தொழில்துறை அமைச்சர் ஹம்மாத் அசார் பாகிஸ்தான் தனக்கு கொடுக்கப்பட்ட கடின இலக்குகளையும் வெற்றிகரமாக செயல்படுத்தியது என்றார்.அதனால் பாகிஸ்தான் ப்ளாக் லிஸ்ட்டுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என இம்ரான் கான் கூறுவதற்கு இதுவே காரணம்.