தொடரும் விலை ஏற்றம்; பால் விலையும் உயர்கிறது

பெட்ரோல், டீசல் விலை சில மாநிலங்களில் 100-ஐத் தாண்டியுள்ள நிலையில், மற்ற மாநிலங்களிலும் இன்னும் சில நாட்களில் சதமடிக்கும் நிலையில் உள்ளது.  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மட்டுமல்லாமல் சமையல் எரியாயுவின் விலையும் ஒரு மாதத்தில் மட்டும் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

போக்குவரத்து செலவுகள் அதிகம் ஆவதால் காய்கறிகளின் விலையும் சமீபத்தில் உயர்ந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அத்தியாவசிய தேவையான பாலின் விலையும் 12 ரூபாயும் வரை உயர்த்தப்படுகிறது.

மத்திய பிரதேசத்தின் ரத்லம் அருகே 25 கிராமங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் அங்குள்ள ராமர் கோவிலில் கூட்டம் ஒன்றை கடந்த செவ்வாய் கிழமையன்று நடத்தியுள்ளனர். அக்கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவு கடுமையாக அதிகரித்துள்ளது.  எனவே பால் விலையை வரும் மார்ச் 1ம் தேதி முதல் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ரத்லம் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹிராலால் சவுத்ரி , “25 கிராமங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் நடத்திய கூட்டத்தில் பால் விலையை உயர்த்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவலால் பால் விலையை உயர்த்த முடியாமல் போய்விட்டது. ஆனால் இப்போது தீவன விலை உயர்வு, அத்துடன் டீசல், பெட்ரோல் விலையும் உயர்ந்து விட்டது. ஒரு எருமை மாட்டினை 1 முதல் 1.50 லட்ச ரூபாய் விலைக்கு வாங்குகிறோம். ஒரு லிட்டர் பாலின் விலை தற்போது 43 ரூபாயாக விற்கப்படுகிறது, மார்ச் 1 முதல் லிட்டருக்கு 55 ரூபாயாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. எங்கள் விலை ஏற்றத்தை நகரில் உள்ள பால் முகவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…