ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தானில் காபுல் மற்றும் நங்கர்கார் மகாணங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.போலீசார் விசாரணையின் படி காரை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட இந்த குண்டு வெடிப்பினால் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஒருவர் படுகாயமடைந்துள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அரங்கேறி வருகின்றன குறிப்பாக காபுல் அதிகமாக குறிவைத்து தாக்கப்படுகிறது. காலை 8 மணியளவில் நிகழ்ந்த இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *