கிரீன் கார்டு மீதான தடை நீக்கம் – ஜோ பைடன்

கரோனா ஊரடங்கு காலத்தில் கிரீன் கார்டு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதால் ஏற்கெனவே ஹெச் 1-பி விசாவில் பணியாற்றும் இந்தியர்கள் பலருக்கு கிரீன் கார்டு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

கிரீன் கார்டு என்பது அமெரிக்காவில் நிரந்தரமாக தங்க அனுமதித்தற்கான சான்று.  தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் நிபுணர்கள் பலரும் அங்கு ஹெச்-1பி விசாவில் தங்கிதான் பணிபுரிகின்றனர்.

ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் பேருக்கு மட்டுமே கிரீன் கார்டு வழங்கப்படும் என உத்தரவிட்டிருந்தது. இதனால் பெரும்பாலான இந்திய பணியாளர்களுக்கு கிரீன் கார்டு கிடைக்க மேலும் தாமதமாகும் சூழல் உருவானது.

முந்தைய அதிபர் ட்ரம்ப் விதித்த தடை அமெரிக்காவின் நலனுக்கு பாதகமாகவே அமைந்துள்ளது. எனவே தடை நீக்கப்படுகிறது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் செயல்படும் நிறுவனங்கள் உலகம் முழுவதும் உள்ள திறமை மிக்க பணியாளர்களை பயன்படுத்திக் கொள்வதற்கு முந்தைய உத்தரவு தடையாக இருந்தது. அமெரிக்காவில், தற்போது கிரீன் கார்டு அனுமதி கோரி 4,73,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

டொனால்டு ட்ரம்ப் விதித்த தடை காரணமாக இவர்களில் 1,20,000 பேரது விசா முடிவடைந்து விட்டது. தற்போது ஹெச் 1-பி விசா அடிப்படையில் கிரீன் கார்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது. இதனால், பலருக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…