காதலருக்காக இன்னொரு உயிரை எடுத்த பெண்!

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலருக்கு காதலர் தினத்திற்கு வித்தியாசமான இதயத்தை கொடுத்துள்ளார்.  ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடி, அதன் இதயத்தை பரிசாக அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மெரலைஸ் வான் டெர் மெர்வே என்ற பெண் சிறு வயது முதலே வேட்டையில் ஆர்வம் உள்ளவராக இருந்து வருகிறார். இதுவரை சிங்கம், புலி, யானை உள்ளிட்ட பல விலங்குகளை வேட்டையாடி உள்ளார். அந்த லிஸ்டில் ஒட்டகச்சிவிங்கி மட்டும் இடம்பெறாமல் இருந்துள்ளது. அதனை வேட்டையாடுவதற்காகவே மெர்வே,காத்திருந்துள்ளார்


இதற்காக காதலர் தின வார இறுதியில் தென் ஆப்பிரிக்க பூங்கா நிர்வாகம் ஒன்றிற்கு 1500 டாலர்கள் கொடுத்து அனுமதி வாங்கி ஆண் ஒட்டகச்சிவிங்கி ஒன்றை வேட்டையாடி உள்ளார். இறந்த ஒட்டகச்சிவிங்கி மேல் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் விலங்குகள்  நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், ”நான் முறைகேடாக எதுவும் செய்யவில்லை. உரிய அனுமதியோடு தான் வேட்டையாடினேன்” என்று மெரலைஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…