உறைந்த நயாகரா!

உலகம் முழுவதும் பருவ நிலை மாற்றத்தினால் பல்வேறு விசித்திரமான நிகழ்வுகள் நடக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு உத்தராகண்டில் பனி ஏரி வெடித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து பனி மலையின் மீது புதிய ஏரி உருவானதாகவும் தகவல் வெளியானது. இப்படி பல்வேறு நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் சூழலில், அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்க எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போனது. அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நீர்வீழ்ச்சி தொடக்கம் முதல் நீர் தேங்கும் இடம் வரை அனைத்தும் உறைந்திருப்பது பார்வையாளர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.