வர்த்தக தடைகளை நீக்க வலியுறுத்தும் சீனா

ஜோ பைடன் தலமையிலான புதிய அமெரிக்க நிர்வாகத்தை பார்வையிட சென்ற சீன தூதர் சீனாவின் மீதான வர்த்தக தடைகளை நீக்குமாறு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சீனாவின் வெளிநாட்டு தூதரான வாங் யி முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மேற்கொண்ட முரண்பாடான சீர்திருத்தங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் சீனாவிலிருந்து வரும் இறக்குமதியின் மீதான கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டார். மேலும், அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக சமநிலையின்மையே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அவருடைய இந்த செயலே சீனாவின் வலியுறுத்தலுக்கு முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.