தொடர்ந்து அத்துமீறும் மியான்மர் ராணுவம்

மியான்மரில் ராணுவத்துக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன. இந்த நிலையில், மாண்டலேவில் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில்,  ராணுவத்தினர் போராட்டக்காரர்கள் மீது நடத்திய தாக்குதலில், பலர் காயமடைந்ததுடன் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

மியான்மர் ராணுவத்தின் இந்தத் தாக்குதலை ஐ. நா, பிரான்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன.

முன்னதாக, கடந்த வாரம் தலைநகர் நேபிடாவில் ராணுவத்துக்கு எதிராக நடத்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் 20 வயதான ஆங் சான் சூ தலையில் குண்டு பாய்தலால் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இதுவே, ராணுவத்துக்கு எதிராக மியான்மரில் நடந்து வரும் போராட்டத்தில் ஏற்பட்ட முதல் மரணம். இந்நிலையில், தற்போது மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர்.

’ போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மியான்மர் கடுமையான விளைவுகளை சந்திக்கும்’ என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த எச்சரிக்கையையும் எதிர்த்து ராணுவத்தினர், போராடும் மக்கள் மீது வன்முறையை கையாண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பாஜகவை புறக்கணிக்கும் அதிமுக… சின்னம், வேட்புமனு என எதிலும் சேர்க்காத எடப்பாடி  

அதிமுக.விற்கு ஆதரவளிப்பதாக பாஜக அறிவித்த போதிலும், பாஜகவை புறக்கணிக்கும் எடப்பாடி அணி. பணிமனையில்…

இடைத்தேர்தல்லாம் சரிவராது… ‘தமிழைத் தேடி’ பயணமே போதும் பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி

தமிழகத்தில்இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது பாமக கௌரவத் தலைவர் ஜி…