ட்யூபர்குளோசிஸ் ஒழிப்பு இலக்கு 2025: பிரதமர் மோடி
இன்று செவ்வாய்கிழமை பட்ஜெட் செயல்பாடு தொடர்பான வெபினாரில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் உடல்நலத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று கூறினார்.
இந்த கொரோனா பேராபத்தை இந்தியா எதிர்கொள்ளும் விதத்தை உலக நாடுகள் கவனித்து வருவதாகவும் மற்றும் முகக்கவசம் அணிவதும்,ஆரம்பத்திலேயே தொற்றினை கண்டறிவதும் கொரோனாவிலிருந்து பாதுகாத்துகொள்ள உதவும் என கூறிய அவர் இந்தியா 2025-ஆம் ஆண்டுக்குள் ட்யூபர்குளோசிஸ்ஸை முழுவதுமாக அகற்றும் எனவும் குறிப்பிட்டார்.மேலும் பேசிய அவர் எதிர்காலத்தில் ஏதேனும் நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டாலும் கொரோனா கற்றுகொடுத்த பாடம் அதனை திறம்பட எதிர்கொள்ள உதவும் எனவும் கூறினார்.