சவுதி ராணுவத்தில் பெண்கள்!

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான்,  நாட்டில் உள்ளபெண்களின் உரிமைக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார்.

பெண்கள் கார் ஓட்ட அனுமதி மற்றும் ஆண்களின் பாதுகாப்பு இல்லாமல் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி ஆகிய மாற்றங்களை கொண்டு வந்தார். இந்த மாற்றங்களை  சவுதி பெண்கள்  மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இதனையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு சவுதி அரேபிய ராணுவத்தில் பெண்களை சேர்க்க முடிவு  எடுக்கப்பட்டது. இந்நிலையில், சவுதி ராணுவம் தற்போது அதற்கான சேர்க்கையை  ஆரம்பித்துள்ளது. கச்சா எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தையே பெரிதும் நம்பியிருக்க வேண்டிய சூழலுக்கு மாற்றாகவும் பொருளாதாரத்தை விரிவுசெய்யும் நோக்கத்திலும், பெண்கள் பொருள் ஈட்டும் வாய்ப்பு ஏற்படுத்தவும், இந்த மாற்று நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது.

இதுகுறித்து சவுதி பாதுகாப்புத்துறை அமைச்சகம் தரப்பில், “ சவுதி அரேபியாவில் ஞாயிற்றுக்கிழமை முதல் ராணுவத்தில் பெண்கள் சேருவதற்கான அனுமதி துவங்குகிறது. இதோடு, ஆண்களுக்கான சேர்க்கையும் தொடங்குகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…