கொரோனா பரவலை காரணம் காட்டுவதா?ஐ.நா தலைவர் ஆவேசம்.
கடந்த திங்கட்கிழமை ஐ.நா தலைவரான ஆண்டனியோ குட்டாரெஸ்
கொரோனா பரவலை காரணமாக கூறி சில நாடுகள் தாங்கள் எடுக்கும் அடக்குமுறை நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது சரியல்ல என தாக்கி பேசினார்.
ஐ.நா-வின் மனித உரிமைகள் கழகத்தின் வருடாந்திர கூடுகையில் பேசிய அவர் கொரோனா பரவலை பயன்படுத்தி இரும்புக்கரம் கொண்டு அடக்குவதோ அல்லது மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதோ முறையல்ல என கூறினார். இவ்வாறு தாக்கி பேசிய அவர் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டையும் குறிப்பிட்டு கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து பேசிய அவர் கொரோனா தடுப்பூசியனாது குறிப்பிட்ட 10 நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டு
130-க்கும் மேலான நாடுகளுக்கு ஒரு தவணை கூட வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.