கிரே லிஸ்ட்டிலிருந்து மீளுமா பாகிஸ்தான்?
தீவிரவாததுக்கு எதிராக பாகிஸ்தன் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் நிதி நடவடிக்கை பணிக்குழு(FATF)-ன் மூன்று நாள் மெய்நிகர் கூட்டமானது கடந்த திங்களன்று தொடங்கப்பட்டது.இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் நிலை குறித்து மறுபடியும் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.பாகிஸ்தான் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து FATF-ன் கிரே லிஸ்ட்டில் இருந்து வருகிறது மற்றும் 27 திட்ட செயல்பாடுகளும் பாகிஸ்தானிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த கூட்டம் பாகிஸ்தான் நிலை குறித்து முடிவெடுக்கும் முக்கிய கூட்டமாக அமைகிறது.