மாத்தி யோசிக்கும் கோகோ கோலா!

தற்போது, உலகையே அச்சுருத்திக் கொண்டிருக்கும் கழிவுகளில், பிளாஸ்டிக் கழிவுகள் தான் முதன்மையானது. உலக மக்கள் அனைவரையும் கவர்ந்த குளிர்பான நிறுவனமான கோகோ கோலா, முக்கிய முடிவை எடுத்துள்ளது.

ஐரோப்பாவில், 2030ம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்கான தனது பணியின் ஒரு பகுதியாக பேப்பர் பாட்டில்களை சோதனை முறையில் பயன்படுத்த தொடங்கியுள்ளது. 

கோகோ கோலா நிறுவனம் பிப்ரவரி 11 அன்று, ஒரு நிமிட குறுகிய வீடியோவை தன் யூடியூப் சேனலில் ‘எங்கள் காகித பாட்டில் முன்மாதிரி – ஒரு படி முன்னோக்கிய பார்வையுடன்’ என்ற தலைப்பில் ஷேர் செய்திருந்தது.  தனது காகித பாட்டில் முன்மாதிரியை ஐரோப்பாவின் சந்தைக்கு எடுத்துச் செல்லத் தயாராக உள்ளது என்றும், சில மாதங்களில், கோகோ கோலா பிரியர்கள்  நிறுவனத்தில் இருந்து வெளிவரும்  பேப்பரால் தயாரிக்கப்பட்ட முதல் பாட்டிலைப்  பெறுவார்கள் என்றும் தெரிவித்தது.

இதன்படி, ஒரு ஆன்லைன் சோதனை மூலம், டேனிஷ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, கோகோ கோலா நிறுவனத்தின் முதல் காகித பாட்டில் முன்மாதிரி இந்த கோடை காலத்தில் ஹங்கேரியில் கிடைக்கவுள்ளது. வலுவான காகித ஷெல்லிலிருந்து தயாரிக்கப்படும் இந்த பேப்பர் கவர், மறுசுழற்சி செய்யப்பட்ட ’பாலிஎதிலீன் டெரெப்தாலேட்’ (PET) ஆல் உருவாக்கப்பட்ட மெல்லிய பிளாஸ்டிக் லைனரைக் கொண்டிருக்கும்.

100 சதவிகிதம் மறுசுழற்சி செய்யக்கூடிய, பிளாஸ்டிக் இல்லாத பாட்டிலை உருவாக்குவதே நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள். இதன்மூலம், எந்தவொரு வாயுவும் தப்பிக்காமல் கார்பனேற்றப்பட்ட பானங்களை எவ்வித சேதமில்லாமல் வைக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…