வெள்ளை மாளிகை தங்கக் கூண்டு வாழ்க்கை – ஜோ பைடன்

அமெரிக்காவின் 46ஆவது குடியரசுத் தலைவராக ஜோ பைடன் கடந்த மாதம் 20 ஆம் தேதி பதிவியேற்றார். இதனையடுத்து, வெள்ளை மாளிகையில் தனது மனைவி ஜில் பைடனுடன் குடியேறினார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அது தான் அவரது இல்லம்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியில் பைடன், வெள்ளை மாளிகை வாழ்க்கை குறித்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில். “காலையில் எழுந்ததும் என் மனைவியைப் பார்த்து எங்கே இருக்கிறோம் என கேட்பேன்.

நான்கு வாரங்கள் ஆன போதும் வெள்ளை மாளிகை வாழ்க்கை இன்னும் பழகவில்லை. துணை அதிபராக இருந்த போது, பலமுறை ஓவல் அலுவலகத்துக்கு வந்துள்ளேன். ஆனால், ஜனாதிபதி குடியிருப்புக்குச் சென்றதில்லை. வெள்ளை மாளிகை வாழ்க்கை தங்ககூண்டு போல் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *