ஐ.நாவில் இந்தியா வம்சாவளிப் பெண்

1966ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் நியூயார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஐ.நா மூலதன நிதி மேம்பாட்டு ஆணையம் (UNCDF) செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் உள்ள பெண்கள், இளைஞர்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிறிய அளவிலான நிதயுதவி வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

இதன் நிர்வாக செயலாளராக இருந்த ஜூடித் கார்லு ஓய்வு பெற்றுள்ளார். இதனையடுத்து,  நிதித்துறையில் சர்வதேச அளவில் மிகவும் அனுபவம் பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ப்ரீத்தி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர், முதலீடு மற்றும் நிதி மேம்பாட்டுத் துறையில் 30 ஆண்டுகாலம் அனுபவம் பெற்றவர். இதற்கு முன்  சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள எல்.எல்.பி. என்ற சிறப்பு மேம்பாட்டு நிதி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், டெல்லியில் உள்ள சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான தனியார்துறை சிந்தனை குழுவான யெஸ் குளோபல் இன்ஸ்டியூட்டின் நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

யூ.என்.சி.டி.எப் – ன் தலைவராக திங்கட்கிழமை பதவியேற்றுக் கொண்ட ப்ரீத்தி சின்ஹா,  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,” உலகளவில் பின்தங்கிய நாடுகளில் இருக்கும் பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறு குறு நிறுவனங்கள், விவசாயிகள் ஆகியோரின் நீடித்த வளர்ச்சியை உருவாக்கும் நோக்கில் தனது பணி இருக்கும்.

மேலும், பாரம்பரியமாக ஒடுக்கப்பட்டு இருக்கும் சமூகங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவது எனது முக்கிய குறிக்கோள். பொது மற்றும் தனியார் துறை பங்களிப்புகளுடன் யூ.என்.சி.டி.எப்-கான நிதியை திரட்டி, அதன்மூலம் சந்தை மூலோபாயத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…