கேரளாவில் தொடரும் பருவமழை..!! தயார் நிலையில் கேரள அரசு..!!

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது அடுத்து , சில மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தற்போது தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் முதலே பரவலாக மழை பெய்து வந்த நிலையில் கடந்த வாரத்தில் இருந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. 

இதனால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெற்கு ஒடிஷாவுக்கு மேல் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் வரும் 4 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற 12 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால் மீனவர்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக காசர்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…