தொடரும் மழை..!! மகாராஷ்டிரா, கர்நாடகாவில் அதிகரிக்கும் பாதிப்புகள்..!

தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ள சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு கரையோர மாநிலங்களில் வரும் நாட்களில் கனமழை தொடரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் அமர்நாத் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.

டெல்லி, ஹரியானா மாநிலங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இருப்பினும் அங்கு இன்னும் 6 லட்சம் பேர் சொந்த இடங்களை விட்டு முகாம்களில் தங்கியுள்ளனர். 9 மாவட்டங்களில் 130 நிவாரண முகாம்கள் இயங்குகின்றன. அசாமில் இதுவரை மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இறந்தோரின் எண்ணிக்கை 190 ஆக உள்ளது.

அதேபோல் மகாராஷ்டிராவில் மழை வெள்ளம் காரணமாக 130 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 128 கிராமங்களில் கனமழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்சிரோலி, ஹிங்கோலி, நாண்டெட், மாரத்வாடா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஜூலை 10 ஆம் தேதி வரை மகாராஷ்டிராவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தால் பல மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை தொடர்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…