மக்களே உஷார்!! தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும்..

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஆந்திரப்பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

அதோடு நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை மற்றும்‌ திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ள என வானிலை மையம் கூறியுள்ளது.

வருகின்ற 7,8,9 தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *