தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை ,விருதுநகர் ,சிவகங்கை ,ராமநாதபுரம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நீலகிரி ,திண்டுக்கல், தேனி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கோயமுத்தூர் ,திருப்பூர் ,,ஈரோடு ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 3ஆம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.அதேபோல் வருகின்ற 4ஆம் தேதி நீலகிரி ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யலாம். 5ம் தேதி நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று முதல் வருகின்ற ஐந்தாம் தேதி வரை தமிழ்நாட்டின் கடலோரப் பகுதி ,கேரள கடலோர பகுதி, லட்சத் தீவு பகுதி ,தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டயலினத்தவர்கள் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு… அனைத்து கட்சி போராட்டம் விரைவில்…

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் பட்டயலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத் விவகாரத்தில் மாநில…

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…