தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் மலைப்பகுதிகள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 36 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.