தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை நீடிப்பு.?

தமிழகத்தில் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக சேலம், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், 31 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி , திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.
நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.
தொடர்ந்து, சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.