தமிழ்நாட்டில் தொடரும் கனமழை
![](https://thenewslite.com/wp-content/uploads/2021/04/rain.jpg)
தமிழ்நாட்டில் பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார், சின்கோனா, அவலாஞ்சி, மேல்பவானி, வால்பாறை, நடுவட்டம், சோளிங்கர் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில். ‘வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிகக் கன மழையும், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.வேலூர்,ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று தொடங்கி 16ஆம் தேதி வரைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொருத்தவரைக்கும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 13ஆம் தேதி வரை மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு இன்று முதல் 16ஆம் தேதி வரைக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளனர்.