தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் ஜூன் 18,19,20 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூடத்துடன் இருக்கும் என்றும் நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *