வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு நிலை…மழை தொடர வாய்ப்பு

ஜூன் 11 ஆம் தேதி வங்கக கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆயுவு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெப்பச்சலனம் காரணமாக, வரும் 9 மற்றும் 10 தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 11ம் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், 12ம் தேதி கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

வடக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 11ம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாவதன் காரணமாக, மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜூன் 09 முதல் ஜூன் 13 வரை தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முல் 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும், மேலும் ஜூன் 13ம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் எனவே, மீனவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *