தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு! மக்கள் மகிழ்ச்சி
அண்மையில், அக்னி நட்சத்திரம் போன்று தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்தது. குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின், பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், நாளையும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், வெயிலின் பிடியில் இருந்த சென்னை மக்கள் நிம்மதிப் பெரு மூச்சு விட்டுள்ளனர்.
மேலும், மழை இல்லாத மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.