அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு மழை

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் அனல் காற்று வீசி வருகிறது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சில பகுதிகளில் மழை பெய்துள்ளது.

இன்றும் 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர் அகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *