தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில், கடந்த சில நாட்களாக அனல் காற்று வாட்டி வந்தது. நேற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களின் மழை பெய்து வெப்பம் தணிந்தது. இதனால், மக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 14 ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். மேலும், 15 ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
16ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் மதுரையில் கோரிப்பாளையம், புதூர் ,மாட்டுத்தாவணி ,சிம்மக்கல், திருப்பாலை அய்யர்பங்களா பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.