தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆரம்பம் முதலே வெயில் மக்களை வாட்டி எடுத்து வருகிறது.கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு இருப்புதாக தகவல் தெரிவித்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்களிலும்,தமிழகத்தின் சில உள் மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் வெயில் மக்களை வாட்டி வருகின்ற நிலையில் இந்த மழை வாய்ப்பு வெயிலின் தாக்கத்தை சிறிதளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.