தென் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை

தமிழகத்தில், சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வருகிறது. அக்னிநட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பே இவ்வளவு வெயிலா என மக்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களை குளிர்விக்கும் வகையில் வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.

தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையிலும், 13 ஆம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *