தென்னிந்திய வரலாற்றை மறைக்கிறதா மோடி அரசு!

பேராசிரியர்.கருணானந்தன் அவர்கள் நம் யூடியூப் சேனலான ‘The News Lite’ சேனலுக்கு பிரத்யேகமாகப் பேட்டி அளித்திருந்தார்.
தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டம் நடத்தி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க ஆலோசனை நடத்தியது. அதில், முதலில் ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்திய பிறகு திறக்கலாம் என கூறியிருந்தது. இதற்கு பேராசிரியர். கருணானந்தன் திமுக இதற்கு அனுமதித்திருக்கக் கூடாது என தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.
மேலும், ஆலையைத் திறக்க அனுமதித்த உயர் நீதி மன்றத்திற்கு ஆவேசம் எனப்படுவது செலக்டிவாகத் தான் உள்ளது என தனது ஆதங்கத்தையும் தெரிவித்திருந்தார். மத்தியில் ஆளும் மோடி அரசு தென்னிந்திய வரலாற்றையே மறைக்க முயற்சிக்கிறது என குற்றஞ்சாட்டியிருந்தார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மும்மொழிக் கொள்கையை திணிக்க முயற்சிப்பது அரசியல் உள் நோக்கம் கொண்டது என தெரிவித்திருந்தார். முழு வீடியோவையும் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.